சிறார் இலக்கியம்

       இளம் மனங்களைச் செழுமைப்படுத்துவதில் சிறார் இலக்கியம் முக்கியப் பங்குவகிக்கிறது. குழந்தைகளுக்குப் புத்தக உலகை அறிமுகப்படுத்துவது என்பது வளமான எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகும். அந்த அடிப்படையில், சிறார் இலக்கியம் தொடர்பான நூல்களெல்லாம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. கதைகள், குழந்தைப் பாடல்கள், பொது அறிவு நூல்கள், நன்னெறி நூல்கள், மொழியாக்கங்கள், பாடநூல்கள், கலைக்களஞ்சியங்கள், இதழ்கள் உள்ளிட்ட பல அரிய நூல்களும் இதழ்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளை வாசிப்புலகத்துக்குள் அழைத்துவந்து அவர்களின் கற்பனைத் திறனை வளர்த்தெடுக்கவும், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் இவை உதவும். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறார் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலருக்குமான அருந்தொகுப்பு இது.

  • Share this theme
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy